உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மாணவர்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பில் சனிக்கிழமை 27 ம் திகதி நடைபெற்றது.
உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான க.ரவீந்திரன் ஒழுங்கமைப்பில், மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் இராஜேந்திரா தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வௌி பூப்பந்தாட்ட உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் இக் கல்விவலயத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், எந்திரி. திருவருட்செல்வன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்மீன்டன் விளையாட்டுப் போட்டியை இளம் சமுதாயத்திற்கிடையே மேலும் விவாக்கி எதிர்காலத்தில் முன்னணி வீரர்களை உருவாக்கும் நோக்குடன் பாடசாலை மாணவர்களுக்கிடையே இப் போட்டி நடாத்தப்பட்கின்றது என உலக தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் ஆசிரிய ஆலோசகருமான க.ரவீந்திரன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற போட்டியில் சுமார் 95 மாணவர்கள் கலந்துகொண்டதுடன் இப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.