மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தின் சிறுவர் கெக்குளு கலை இலக்கிய போட்டி(30) வௌ்ளிக்கிழமை நடைபெற்றது.
சமுர்த்தி தலைமை முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை கலந்துகொண்டு இந்த கலை இலக்கிய போட்டி தொடர்பில் கருத்துக்களை கூறி போட்டியில் பங்குபற்ற வந்த சிறுவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சமுர்த்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி பிரிவினால் வருடந்தோறும் நடாத்தப்படும் இந்த சிறுவர் கெக்குழு போட்டியில் குறு நாடகம், கிராமிய நடனம், நாட்டார் பாடல், கட்டுரை, கவிதை, பேச்சு, அறிப்புபாளர், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் வயது அடிப்படையில் நடைபெற்றது.
இப் போட்டிகளுக்கு நடுவர்களாக கலாசார உத்தியோகத்தர் எம்.சிவானந்தராஜா, ஆசிரியர்களான நந்தகோபால், பவளநாதன் போன்றோர் கலந்துகொண்டனர்.
இன்று நடைபெற்ற பிரதேச மட்ட போட்டியில் 1ம் நிலையில் தெரிவு செய்யப்படுவோர் அனைவரும் மாவட்ட மட்ட போட்டி கலந்துகொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வே.பரஞ்சோதிநாதன் மற்றும் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.