Breaking

Post Top Ad

Saturday, August 10, 2019

மட்டக்களப்பு மேற்கு - ஏறாவூர் பற்று கல்விக் கோட்டத்தில் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் ஆராயப்பட்டு அறிக்கை தயாரிக்கும் நிகழ்வு





மட்டக்களப்பு மேற்கு கல்விவலயத்திலுள்ள ஏறாவூர் பற்று  கோட்டத்தில் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில்  ஆராயப்பட்டு இக் கோட்டத்திலுள்ள தேவைப்பாடுகள் பற்றிய அறிக்கை தயாரிக்கும் கூட்டத்தின்  இறுதிநாள் நிகழ்வுகள்   தன்னாமுனை தனியார்  விடுதி ஒன்றில் நடைபெற்றது.


ஏறாவூர் பற்று  கோட்டத்திலுள்ள 16 பாடசாலைகளின் சார்பில் வருகைதந்த அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிருவாகம், பழைய மாணவர் சங்கம் உள்ளிட்ட ஏனைய கிராமமட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

வேள்ட் விஷன் ( உலக தரிசனம்) நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இச் செயற் திட்டத்தில் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்கள் கொண்ட இன் நிகழ்ச்சித் திட்டத்தில், அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உரிமைகள் சரியான முறையில் கிடைக்கப்பெறுகின்றதா என்பது தொடர்பிலும், ஏனைய மாவட்ட மாணவர்களைுக்கு கிடைக்கும் கல்வி வளங்கள் இக் கோட்டத்திற்கும் கிடைக்கின்றதா எனவும் ஆராயப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு  அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படவுளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages