Breaking

Post Top Ad

Friday, August 30, 2019

மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள காஞ்சிரங்குடா கிராமத்திற்கான காணி பயன்பாட்டுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான கூட்டம்




 (வவுணதீவு நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள காஞ்சிரங்குடா கிராமத்திற்கான கிராம மட்ட காணி பயன்பாட்டுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான பங்குதாரர் கூட்டம் இன்று(30) வௌ்ளிக்கிழமை மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடை​பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது அரச - தனியார்  காணிகள், விவசாய காணிகள், கால்நடை வளர்ப்பு நிலங்கள் மற்றும் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட காணி பயன்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட காணி உதவிப் பணிப்பாளர் அருளானந்தம் இன்பா​தேவி, மண்முனை மேற்கு பிர​தேச கால்நடை வைத்திய அதிகாரி, விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச காணி உத்தியோகத்தர், கிராமத்தில் கடமையாற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages