Breaking

Post Top Ad

Saturday, August 3, 2019

மட்டு. கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சரஸ்வதி சிலை திரைநீக்கமும் மாணவர்களை பாராட்டும் நிகழ்வும்


(பட்டிப்பளை நிருபர்)   


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திலுள்ள கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சரஸ்வதி சிலை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் பாடசாலையில் கல்விப் பொதுத் தராத சாதாரணதரம் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.



கடுக்காமுனை வாணி வித்தியாலய அதிபர் மு.குணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன்,  தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய அலுவல்கள் அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் இளைஞர் முன்னணியின் தலைவருமான கணேசமூர்த்தி கோபிநாத் போன்றோர் அதிதிகளாக கலந்துகொண்டு சரஸ்வதி சிலையினை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

வாலைசோதிடர், வைத்தியர் பூ.சின்னத்தம்பி அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரின் பேரப்பிள்ளைகளான சானுஜன், சதுர்சன் ஆகியோரின் நிதியுதவியில் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து இன் நிகழ்வில் இப் பிரதேசத்தைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை என்பவரால் கல்வியில் சிறந்த சித்யைப் பெற்ற 28 மாணவர்களுக்கு 1000 ரூபா வைப்புச் செய்து வங்கிப் புத்தகங்களையும் வழங்கி வைத்தார்.


 இந் நிகழ்வில் கல்வித் திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிர்த்தி சங்கத்தினர், கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages