Breaking

Post Top Ad

Sunday, August 11, 2019

இனப்பிரச்சனைக்கான தீர்வும், வடக்கு கிழக்கு அபிவிருத்தி பற்றிய சிந்தனையும் உள்ளவருக்கே நிபந்தனையுடன் ஆதரவு - சிறிநேசன் எம்.பி




(வவுணதீவு நிருபர் )

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர் சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய ஆழுமை சக்தி உள்ள தலைவர்கள் தேசிய இனப் பிரச்சனை தொடர்பான வௌிப்படையாக செயற்படவேண்டும் அவ்வாறு செயற்படுபவர்களுக்கு நாம் நிபந்தனையுடன் ஆதரவை வழங்குவோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.


ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி காலை மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்தேதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த  ஜனாதிபதி தேர்தலின்போது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் எமக்கு பல வாக்குறிதிகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்தார் ஆனால் அவை எதையும்  நிறைவேற்றத் தவறியவராக தற்போது உள்ளார். 

எனவே நாம் கடந்த காலத்தில் தோர்தல் வாக்குறுதிகளில் பல படிப்பினைகளை பெற்றுள்ளோம். தேர்தல் காலத்தில் அண்ணன்தம்பியாக இருந்துவிட்டு வெற்றி பெற்றவுடன் நீயாரோ நான் யாரோ என்பதுபோல் இகந்தகால ஆட்சியாளர்களின் செயற்பாடு காணப்பட்டது.

 சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெறுவேன் என   ஒருவர் மமதையுடன் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றார் அவ்வாறான எண்ணத்துடன் இருப்போருக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்.

எனவே யார் ஜனாதிபதியாக வருவது என்பது எமது பிரச்சனையல்ல, வலக்கையில் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு இருக்கவேண்டும் இடக்கையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி பற்றிய சிந்தனைகள் இருக்கவேண்டும் இப்படியான ஒருரையே நாம் ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.   என  தெரிவித்தார். 





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages