Breaking

Post Top Ad

Wednesday, August 7, 2019

மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டுவிழா மட்டகளப்பு வெபர் விளையாட்டுஅரங்கில்இடம் பெற்றது.


ஆரம்பகைத்தொழில் சமூகவலுவூட்டல் அமைச்சின் வழிகாட்டுதலில் சமூகசேவைத்திணைக்களம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் திறன்களைமதிப்பீடுசெய்யும் இவ் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் மாவட்ட விளையாட்டுவிழா மட்டகளப்பு வெபர் விளையாட்டுஅரங்கில் வெகுவிமர்சையாக இடம் பெற்றது.

மாவட்ட மேலதிகஅரசாங்கஅதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நடைபெற்ற இந்தவிளையாட்டுவிழாவில் இம் மாவட்டத்தின் 14 பிரதேசசெயலாளர் பிரிவுகளிலும் இருந்துசுமார் 500 மாற்றுத்திறனாளிகள் பங்கு கொண்டு தமதுதிறமைகளைவெளிப்படுத்தினர்.

இங்குவகைப்படுத்தப்பட்டஆண்,பென் மாற்றுத்திறனாளிகள் (ஓட்டநிகழ்வுகள் ,நீளம்,உயரம் பாய்தல் ,குண்டு,பருதிவீசுதல்,அஞ்சல் ஓட்டம்,மற்றும் பாரம்பரியபலவிளையாட்டுநிகழ்வுகளிலும் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட அரசாங்கஅதிபர் மாணித்கம் உதயகுமார்,பிரதமஅதிதியாகக்கலந்து கொண்டு இப்போட்டிகளில் திறமைகாட்டியவர்களுக்குதிறமைச்சான்றிதங்களையும் சிறப்புபரிசில்ளையும் வழங்கிவைத்தார். அத்துடன் இப்போட்டிநிகழ்வுகளில் கலந்துகொண்டசகலமாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்புபரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இம் மாவட்ட போட்டிநிகழ்வுகளில் முதல் இடங்களைபெற்ற  இவ் ஆண்டுக்கானமாற்றுத்திறனாளிகள் இவ்வாண்டின்தேசியவிளையாட்டுவிழாவில் பங்கேற்கதகுதிபெற்றதாக மாவட்ட சமூகசேவைஉத்தியோகஸ்தர் திருமதி. சந்திரகலாயோகேஸ்வரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் காணிப்பிரிவுமேலதிக அரசாங்கஅதிபர் திருமதிநவரூபரஞ்சனி முகுந்தன்,மாவட்ட கணக்காளர் கே.கேதீஸ்வரன் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதிசசிகலா.புண்னியமூர்த்தி, பிரதேசசெயளாலர்கள் மற்றும் அரசசேவைபணியாளர்கள் மாற்றுத்திறனாளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் எனபலரும் கலந்துசிறப்பித்தனர்.








No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages