(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்தில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் செயற்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (30ம் திகதி) வௌ்ளிக்கிழமை பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி திட்டம் 2018ம் ஆண்டில் 1ம் கட்டமாகவும், 2019 மற்றும் 2020 ம் ஆண்டில் 2ம் கட்டமாகவும் இடம்பெறவுள்ளது.
இப் பிரதேசத்தில் உள்ள ஈச்சந்தீவு, கன்னங்குடா, கொத்தியாபுலை, கரையாக்கந்தீவு ஆகிய நான்கு கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இளைஞர்கள் தலைமையிலான சுற்றுச் சூழல் பாதுகாப்பு சார்ந்த அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பில் நீண்டகாலத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அமுல்படுத்தும் இத் திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு சிறந்தமுறையில் அமையுமானால் இத் திட்டம் மேலும் விரிவடைந்து சிறந்தமுறையில் அமையும் என வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் நிலக்சி தவராஜா தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சியாத், மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர் ஜே.சர்வேஸ்வரன், வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் நிலக்சி தவராஜா , மாவட்ட இளைஞர் சேவை உதவிப் பணிப்பாளர் ஆலதீன் ஹமீர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.