வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் "மாணவர் சமய நிழல்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு தாளங்குடாவில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் அறநெறி பாடசாலைக்கான கட்டடத்தினை அமைச்சர் சஜித் பிரேமதாச சனிக்கிழமை (03.08.2019) உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சிசு தஹம் செவண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அறநெறிப் பாடசாலைக் கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கு போதிய கட்டட வசதி இல்லாத பொருளாதார நெருக்கடிமிக்க பௌத்தஇ இந்து. கிறிஸ்தவ மற்ம் இஸ்லாமிய அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய கலாசார நிதியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டநான்கு மில்லியன் ரூபாய் நீதியில் அறநெறிப் பாடசாலை நிருமானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.