(வவுணதீவு நிருபர்)
கராத்தே தலைமை பயிற்றுவிப்பாளர் கறுப்பு பட்டி தரம் 7 ஐ உடைய கே.ரி.பிரகாஷ் தலைமையில் மேற்படி தரப்படுத்தல் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன்போது பிரதான போதனாசிரியர்களான குகன், டேவிட், சில்வா, நிஷா, விமல் போன்றோரும் கலந்துகொண்டனர்.
இந்த தரப்படுத்தல் நிகழ்வில் இன்றைய தினம் 100 இளம் கராத்தே வீரர்கள் கலந்துகொண்டதுடன் இந்த தரப்படுத்தல் நிகழ்வு ஒரு வாரத்திற்கு நடைபெறும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதில் ெதரிவு செய்யப்படும் இளம் வீரர்களுக்கு புதிய பட்டிகள் வழங்கப்படுவதுடன் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு சோடோக்கான் கராத்தே பயிற்சி நிலையத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் கே.ரி.பிரகாஷ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.