மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்திய சிம்போசியம் மாவட்ட சிறுவர் சபை நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் உதவியில் நடைபெற்ற இந்த மாவட்ட சிறுவர் சபை நிகழ்வில் சிறுவர் நலன் சார்ந்த பல வியடங்கள் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வீ.குகதாசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் கலந்துகொண்டார்.
சிறுவர்கள் நலன் சார்ந்த கொள்கை ரீதியான தீர்மானங்கள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வகையில் எமது மாவட்டத்தில் சிறுவர்கள் நலன் சார்ந்த பல செயற்பாடுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியால் நாம் முன்னெடுத்துள்ளோம் என இந் நிகழ்வில் கலந்துகொண்ட உதவி மாவட்ட செயலாளர் நவேஸ்வரன் தெரிவித்தார்.
இதன்போது "சிற்பமாகும் சிறுவர்கள் " எனும் காலாண்டு சஞ்சிகையினை வௌியிடுவது தொடர்பிலும் சிறுவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் ஆக்கங்கள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிறுவர் அபுவிருத்தி நிதியம் அமைப்பின் உத்தியோகத்தர் மன்சூர் அகமட், வவுணதீவு பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், 14 பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த சிறுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.