Breaking

Post Top Ad

Friday, August 2, 2019

மட்டு. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை



 (வவுணதீவு நிருபர்)

மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சிப்தொற புலமைப் பரிசில்கள் வழங்குவதற்கு மாணவர்களுக்கான  நேர்முகப் பரீட்சை இன்று வௌ்ளிக்கிமை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.


மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு ​​மேற்கு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஜெயக்குமணன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் தங்கத்துரை, சமுர்த்தி முகாமையாளர் ரஜிந்தினி, சமுர்த்தி சமூக பாதுகாப்பு விடய உத்தியோகத்தர் கு.ஜெயக்குமார் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கல்விப் பொதுத் தராதரம்  கற்பதற்கென இவ்வருடம் 2019ஆண்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு சமுர்த்தி திணைக்களத்தினால் இரண்டு வருடங்களுக்கு அவர்களின் கல்வி மேம்படுத்துவதற்காக மாதாந்தம் 1500 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

இன்று நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 24 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் 237 மாணவர்கள் வருகைதந்திருந்தனர்.

சமுர்த்தி சிப்தொற எனும் புலமைப் பரிசில் திட்டம் சமுர்த்தி திணைக்களத்தினால் வருடந்தோறும்  உயர் கல்விக்காக மாணவர்களுக்கு வருகின்றது.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages