Breaking

Post Top Ad

Tuesday, August 13, 2019

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் சமூகத் தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் குறுந் திரைப்படம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி



மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் இல்லத்தின் சமூகத் தொடர்பு நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் உள்ள பங்குப் பிரிவுகளில் குறுந் திரைப்பட கலைஞர்களுக்கு குறுந் திரைப்படம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி திங்கட்கிழமை(12) மட்டக்களப்பு  கத்தோலிக்க மண்டபத்தில் நடைபெற்றது.



இந் நிகழ்வில் வளவாளர்களாக  கலைக்கோட்டன் இருதயநாதன், குறும்பட இயக்குனர் அலோசியஸ், கிங்ஸ்லி இராசநாயகம் போன்றோர் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு மறை மாவட்டத்திலுள்ள பங்குப் பிரிவுகளில் இருந்து வருகைதந்த இளம் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டதுடன், எதிர்வரும் காலங்களில் மறை மாவட்ட ரீதியில் நடாத்தப்படும் குறுந் திரைப்பட போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டு இவர்களுக்கு இப் பயிற்சி நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மறைமாவட்ட  சமூகத் தொடர்பு நிலைய அருட்தந்தை ஆர்.டி. பிரசன்னா, மட்டக்களப்பு மாவட்ட செயலக கிறிஸ்தவ கலாசார இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages