Breaking

Post Top Ad

Friday, August 2, 2019

மட்டு. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வீசிய காற்றினால் சில வீடுகள் ​​​​சேதம்.



( வவுணதீவு நிருபர் )

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயித்தியமலை, நெடியமடு போன்ற கிராமங்களில் நேற்று வியாழக்கிழமை  1ம் திகதி மாலை வீசிய சுழல் காற்றினால் சில வீடுகள் சேதமடைந்துள்ளது.


நேற்று மாலை 6 மணியளவில் மழையுடன்  வீசிய காற்றினால் ஆயித்தியமலை ஔிமடு கிராமத்திலும், நெடியமடு கிராமத்திலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.


நெடியமடு கிராமத்தில் இரண்டு வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்,   ஔிமடுவில் உள்ள கிராம த்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.


இச் சேதத்தினை  கிராம  சேவகர் பார்வையிட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages