Breaking

Post Top Ad

Thursday, August 1, 2019

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு 32 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம்

(வவுணதீவு  நிருபர் )

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள  பாடசாலைகளுக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை 29ம் திகதி  மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எஸ். சுரனுதன், க.ஹரிகரராஜ் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தேசிய கீதத்தையடுத்து, மட்டக்களப்பு மேற்கு வலய கீதம் இசைத்தலுடன் ஆரம்பமான இன் நிகழ்வில் இவ் வலயத்திலுள்ள மூன்று கல்விக் கோட்டங்களுக்குமாக 32 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டது. 

ஆசிரியர்  எனும் வளம் பெரும் குறையாகவுள்ள இவ் வலயத்திலிருந்து தற்போது நடைபெற்ற தேசிய மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை எமது மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர், தற்போது விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் மாணவர் மத்தியில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுகொடுக்கும் என வலயக் கல்விப்பணிப்பாளர்  சிறிதரன் தெரிவித்தார். 














No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages