(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே அமைந்துள்ள புகழ்பெற்ற ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 65ஆவது வருடாந்த திருவிழா எதிர்வரும் 30ம் திகதி வௌ்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இத் திருவிழாவின் முன் ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டம் செவ்வாய்கிழமை 27ம் திகதி மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் ஆயித்தியமலை சதா சகாய மாதா திருத்தலத்தில் நடைபெற்றது.
இதன்போது சுகாதாரம், தண்ணீர் பிரச்சனை, பாதுகாப்பு, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல விடயங்கள் பற்றி முதலாவது கூட்டத்தில் தீர்மானித்தபடி இங்கு மீண்டும் ஆராயப்பட்டு அதன்படியே முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் 7ம் திகதி காலை 5மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகும் எனவும் வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு ஊடாகவும், செங்கலடி புனித நிக்கலஸ் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி கரடியனாறு ஊடாகவும் இரு வழிப் பாதயாத்திரை இடம்பெறும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிக்கு கூட்டுத் திருப்பலி இடம்பெற்று திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சண்முகராஜா, ஆலய அருட்தந்தை அன்ரனி டிலிமா பொலிஸ் அதிகாரிகள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச கலாசார உத்தியோகத்தர், மாவட்ட கிறிஸ்தவ கலாசார இணைப்பாளர், அரச அரச சார்பற்ற திணைக்களத் தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.