ஆரையம்பதி பிரிவின் விவசாயப் போதனாசிரியர் குந்தவை ரவிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை நலன்விரும்பிகள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் கடந்த காலத்தில் இப் பாடசாலைக்கு தோட்டம் அமைப்பதற்கென சில பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆசிரியர், மாணவர்களால் இங்கு அமைத்திருக்கும் தோட்டத்தினை மேலும் சிறந்தமுறையில் விரிவுபடுத்தும் வகையில் செய்முறைப் பயிற்சியுடன் விளக்கமளிக்கும் விழிப்பூட்டல் நிகழ்வும் இதன்போது நடாத்தப்பட்டது.
இந்த பாடசாலை தோட்டம் எனும் திட்டம் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது என பாடசாலை நலன் விரும்பிகள் இதன்போது கருத்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.