மட்டக்களப்பு மாவட்டம், ஆயித்தியமலை பிரதேசத்தில், லண்டன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற, அன்னையின் சமூக நற்பணி மன்றத்தின் உதவியில் அமைக்கப்பட்ட மூன்று (3) குடிநீர் கிணறுகள் மக்கள் பாவனைக்காக இன்று செவ்வாய்கிழமை கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், கரடியனாறு மகாவித்தியாலய அதிபர் ஆர்.செந்தில்நாதன், மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் ரி. கரிகாலன் போன்றோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிள்ள ஆயித்தியமலை, மணிபுரம் போன்ற கிராமங்களில் மக்கள் குடிநீர் பிரச்சனையினை தீர்க்கும் வகையில் களுவாஞ்சிகுடி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஊடாக, லண்டன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினால் இங்கு மூன்று கிணறுகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று தூரப் பிரதேசங்களிலிருந்து பாடலைக்கும் ஏனைய வகுப்புக்களுக்குச் செல்லும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் சிலருக்கு கற்றல் உபகரணம் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைத்ததுடன், இக் கிராமத்திலுள்ள வயோதிப அன்னையர்களுக்கு ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவிகளைப் பெற்றுக்கொண்ட இப் பிரதேச மக்கள் லண்டன் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் உறுப்பினர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தனர்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.