Breaking

Post Top Ad

Monday, July 8, 2019

மட்டக்களப்பில் நகை தொழில் புரியும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு கடை முற்றாக சேதம்.

 
( எஸ்.சதீஸ்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலையில் நகை உற்பத்தி செய்யும் கடையொன்று தீப்பிடித்ததில் அக் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


மேற்படி கடை பூட்டியிருந்த வேளையிலே இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு, முனை வீதி, 2ம் குறுக்கில் அமைந்துள்ள மேற்படி கடையில் தங்க நகைகள் தயாரிக்கப்பட்டதுடன் தங்க நகைகளுக்கு தங்க முலாம் இடும் வேலைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.

இத் தீ விபத்து மின் ஒழுக்கினால் ஏற்பட்டதா அல்லது வேறு வழிகளால் ஏற்பட்டதா என மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இக் கடையில் இருந்த நகைத் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages