ஈழத்தமிழர் பேரவையின் தலைவர் பிலிப் முருகையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், முற்போக்குத் தமிழர் அமைப்பு, மக்கள் முன்னேற்றக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தற்போதைக்கு கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றன தொடர்பில் இங்கு கருத்துக்கள் பல பரிமாறப்பட்டதுடன், அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு புதிய கூட்டமைப்பினை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது கிழக்கின் தமிழர் அரசியல் தொடர்பில் புதிதாக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சி அமைக்கப்பட்டுள்ள போது மேலுமொரு கூட்டமைப்பு என்ற பெயருடன் கட்சியொன்றினைப் புதிதாக அமைப்பது மக்கள் மத்தியில் சலிப்புத் தன்மையை ஏற்படுத்துவனவாக அமையும் என்ற கருத்துக்கமைவாக கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கொள்கைப் பரப்புரைகள் மற்றும் யாப்பு விதிகள் என்பவற்றை வந்துள்ள கட்சிகள் அனைத்தும் ஆராய்ந்து கட்சித் தலைமைகளுடன் கலந்துரையாடி மேலதிக தீர்மானங்களை எடுப்பது தொடர்பாகத் தீர்மானங்கள் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.