(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் விவசாயி ஒருவரின் தென்னந் தோப்பினை சனிக்கிழமை (27) அதிகாலை காட்டுயானைகள் துவசம் செய்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு கிராமங்களில் விவசாயி ஒருவரின் தென்னந் தோப்பினை சனிக்கிழமை (27) அதிகாலை காட்டுயானைகள் துவசம் செய்துள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் கிராமத்திற்குள் அமைந்துள்ள குறித்த விவசாயியின் தோட்டத்தினுள் சில காட்டுயானைகள் ஊடுருவி அங்குள்ள ஒன்பது தொன்னை மரங்களை அழித்து துவசம் செய்துள்ளது.
காட்டுயானைகளின் இவ்வாறான அழிவினால் எமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படு வருவதாக இவ் விவசாயிகள் கூறுகின்றனர்.
இக் கிராம மக்கள் அன்றாடம் காட்டு யானைகளின் தொல்லையால் தமது குழந்தைகளுடன் இரவில் தூக்கமின்றி அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இப் பிரதேசத்தில் யானை பாதுகாப்பு வேலியில் மின்சாரம் இல்லாமல் உடைந்து சேதமடைந்துள்ள காரணத்தால் காட்டுயானைகள் தங்கு தடையின்றி தமது தோட்டத்திற்குள் இறங்கி தென்னைமரங்கள், வாழைமரங்கள், மற்றும் தோட்டங்களையும் அழித்துவிட்டுச் செல்வதாகவும் இதனை பொறுப்புமிக்க அதிகாரிகள் யாரும் பொருட்படுத்தாமல் பாராமுகமாக இருப்பதாகவும் இவ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.