(மயூ )
மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய்கிழமை16ம் திகதி மாலை 7மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.
கன்னங்குடாவைச் சேர்ந்தவர் பண்டாரியாவௌியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41வயதுடைய தவராசா தற்பரன் என்பவரே இவ் விபத்தில் மரணமானவராவார்.
வவுணதீவு - ஆயித்தியமலை பிரதான வீதியிலுள்ள முள்ளாமுனை பகுதியில் வைத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிலில் சென்று கொண்டிருந்த வேளையில் உழவு இயந்திரத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இரவது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பில் ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.