போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துரை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று விகாரையொன்றில் அறநெறி பாடசாலையொன்றை நிர்மானிப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது :
போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா? இல்லையா என்பது குறித்தே இன்று அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது. நான் இந்த நாட்டின் பிரஜை என்ற ரீதியில் நாட்டு மக்கள் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று எண்ணுபவர்களில் நானும் ஒருவன்.
நான் இங்கு சாதாரண போதைப்பொருள் வியாபாரிகள் பற்றி குறிப்பிடவில்லை. போதைப் பொருள் விற்பனை , கடத்தல் என்பவற்றுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு , நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையிலிருக்கும் பாரிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பற்றியே பேசுகின்றேன்.
சிறையிலிருந்து கொண்டும் தம்முடைய போதைப் பொருள் கடத்தல், விற்பனை முன்னெடுத்துக் கொண்டிருப்பர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் சட்ட ரீதியான நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.