Breaking

Post Top Ad

Saturday, July 6, 2019

சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது


 (எஸ்.சதீஸ்)

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் த.வசந்தராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் தக்ஷ ஜானந்த சுவாமிகள், மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.தேவதாசன், மௌலி அல்ஹாஜ் எச்.எம்.ஷாஜஹான், மட்டக்களப்பு கச்சேரியின் மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரன், மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள், இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்த்தவ மதத் தலைவர்கள், மற்றும் சமூக செயற்பட்டார்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்காலத்தில், எவ்வாறு கொண்டு செல்தல், கிராம மட்டத்தில் எவ்வாறு இவற்றை  அமுல்செய்தல் போன்ற பல விடையங்கள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டது.


இதன்போது வருகைதந்த ஒவ்வொருவருக்கும் இன சமய நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் பொருட்டு சந்தர்பங்கள் வழங்கப்பட்டுதுன் அவர்கள் தமது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இவ்வாறான நிகழ்வுகள் மட்டக்களப்பு  மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களிலும் தொடர்ந்தும் இடம்பெற வேண்'டும் எனவும் வருகை தந்தோரால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages