இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு கூழாவடியைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழக மணவியான உமாசங்கரி கடந்த வியாழக்கிழமை 11ம் திகதியன்று மரணமானார்..
மட்டக்களப்பு - கூழாவடியைச் சேர்ந்த 22 வயதுடைய கருணாகரன் உமாசங்கரி எனும் பெண்ணே உயிரிழந்தவராவார்
இவர் கிழக்கு பல்கலை கழகத்தில் கலைத் துறையில் கல்வி பயின்றுவந்த மாணவியாவார்.
அன்னாரின் இறுதிச் கிரியைகள், இறை ஆராதனைகள் சனிக்கிழமை (13ம் திகதி ) கூழாவடி 8ம் குறுக்கிலுள்ள தனது இல்லத்தில் நடைபெற்று ஊறணி பொது மைதானத்தில் இறை வழிபாட்டுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது சீயோன் தேவாலய போதகர்கள், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
கருணாகரன் உமாசங்கரி எனும் மாணவியோடு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர் 31 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.