மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சஜித் பிரேமதாச அவர்களின் இணைப்பாளரும் எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவருமாகிய ம.ஜெகவண்ணண் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுத்திட்டங்கள் நிர்மானிக்கப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு வீட்டுத் திட்டங்களை நிர்மானிப்பதற்கு அமைச்சர் சஜித் பிரேமதாச அனுமதியளித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்படாத கிராமங்களில் வீடற்ற வசதி குறைந்த மக்களிற்கு வீடுகள் நிர்மானித்துக் கொடுக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக திட்டங்கள் செயற்ப டுத்தப்பட்டு வருகின்றது.
அத்தோடு 15 புதிய வீட்டுத்திட்டத்திற்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் புதிய வீட்டுத்திட்டத்தினை அமைப்பதற்கும் அண்மையில் அமைச்சர் அவர்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நிர்மானிக்கப்படவுள்ள 650 வீடுகளை உள்ளடக்கிய மாதிரி வீட்டுத்திட்ட கிராமங்களில் அடங்கும் ஒவ்வொரு வீடும் தலா 750,000 இலட்சம் ரூபாய் பெறுமதிமிக்க 26 வீட்டுத்திட்டங்களுக்காக 48 மில்லியன் ஏழு இலட்சத்து ஜம்பதாயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வீட்டுத்திட்டங்களிற்காக உள்ளக பாதை, மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக எஸ்.பீ.ஜீ அணியின் மாவட்ட தலைவர் ம.ஜெகவண்ணண் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.