(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி நிவாரணம் கோரி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு சமுர்த்தி உருத்துப் பத்திரம் வழங்கும் 27.6.2019 பிற்பகல் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 24 கிராம ேசவகர் பிரிவுகளிலிருந்து 2997 புதிய சமுர்த்தி நலன்பெறும் பயனாளிகளுக்கு இந் நிவாரணப் பத்திரங்களை பெற தகுதி பெற்றுள்ளனர்.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் சுபா சதாகரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச சமுர்த்தி தலைமை முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, திட்ட முகாமையாளர் ரஜிந்தினி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இன்று மண்டபத்தடி, குறிஞ்சாமுனை. கரையாக்கந்தீவு, காயான்மடு போன்ற கிராம மக்களுக்கு இந் நிவாரணங்கள் வழங்கப்பட்டதுடன் ெதாடர்ந்து ஏனைய கிராமங்களிலுள்ள பயனாளிகளுக்கும் வழங்கிவைக்கப்படும் என இங்கு அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.