மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இருவர் தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்றவர்கள் மோட்டர் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்
இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடயில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து பொலிசார் மீது தாக்க முற்பட்டவேளை பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்றை இனம் தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச் சென்றுள்ளார் இதனையடத்தே. அங்கு பதற்றம் ஏற்பட்டது
இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுணதீவு களப்பு பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்
இதேவேளை புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் மேவதிகமாக இராணுவத்தினர் பொலிசார் அழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மற்று விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.