எந்த சின்னத்தின் கீழ் எந்த கூட்டணியில் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்டம், தொம்பே தேர்தல் தொகுதியின் அதிகாரசபைக் கூட்டத்திற்கு பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
யார் எந்த சின்னத்தின் கீழ் அல்லது கூட்டணியின் கீழ் போட்டியிட்டாலும், நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராக இருப்பார்.
வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன், ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் பௌத்த பிக்குகள் தொடர்பாக தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜகருண, ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அவர் பௌத்த சங்க சபையினரிடம் மன்னிப்பு கோரியது சிறந்த செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.