அண்மையில் தேசிய மாணவர் படையணி (கடேற்) பயிற்சி பெற்று வெளியேறிய 25 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு (29.07.2019) திங்கள் காலை 7.30 மணிக்கு மட்.பட்.வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் திரு.ச.கணேசமூhத்தி அவர்களின் தலைமையில் வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட போரதீவுப்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி திரு.த.அருள்ராஜா அவர்கள் மாணவர்களுக்கான நினைவு ஒழிப்படங்களை வழங்கி கௌரவித்தார்.
சுpறப்ப அதிதி 38வது பிரிவின் கடேற் பயிற்சி பொறுப்பதிகாரி லெப்டினன்ட் ச.காண்டீபன் அவர்கள் மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்த பட்டிருப்பு கல்வி வலய விஞ்ஞானப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளரும் இவ்வித்தியாலய Pளுஐ இணைப்பாளருமான திரு.எஸ்.நடேசமூர்த்தி அவர்களும் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விக் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் அவர்களும்; வித்தியாலய அதிபர் திரு.ச.கணேமூர்த்தி அவர்களும் அம் மாணவர்களுக்குமான சான்றிதழ்களை வழங்கி கௌரவமளித்தனர்.
போரதீவுப்பற்று பிரதேசதிதின் வரலாற்றிலேயே முதல் தடவையாக கடேற் பிரிவை ஆரம்பித்து வைத்த இவ் வித்தியாலய அதிபர் அவர்களை அனைத்து அதிதிகளும் பாராட்டி புகழ்ந்து பேசியமை குறிப்பிடக்கூடியது.
இந்நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய திரு.உருத்திரராசா ஆசிரியரே நன்றியுரையினையும் வித்தியாலய உதவி அதிபர் யோ.கந்தசாமி அவர்கள் வரவேற்பினை; .ஆற்றியிருந்தனர் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.