(வவுணதீவு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பன்சேனை உதய ஔி விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு வியாழக்கிழமை 18 ம் திகதி இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இவ் வேலைத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைத்தார்.
கம்பரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் நிதி ஒதுக்கீட்டில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைத்திட்டமாக இது அமையவுள்ளது.
இந் நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் சிவநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் லோகிதகாந்தன், மற்றும் உதய ஔி விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தற்போது இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர் இருந்தபோதும் இந்த கம்பரலிய திட்டத்தின் மூலம் நாம் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய நிதியைப் பயன்படுத்தி அபிவிருத்திகளைச் செய்து வருகின்றோம். என பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.