Breaking

Post Top Ad

Sunday, July 21, 2019

மட்டக்களப்பு அமிர்தகழி ஶ்ரீ சித்திவினாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி



     
மட்டக்களப்பு, அமிர்தகழி ஶ்ரீ சித்திவினாயகர் மகா வித்தியாலயத்தில் ஒரு நாள் தலைமைத்துவப்  பயிற்சி முகாம் இன்று சனிக்கிழமை 2.07.2019 ம் திகதி நடை​பெற்றது.


மட்டக்களப்பு  உளநல பயிற்றி ஆலோசனை நிலையத்தினால் நடாத்தப்பட்ட இப் பயிற்சி முகாம், உளநல ஆலோசனையும் வழிகாட்டலும் பிரிவின் ஆசிரியர் அன்ரன் ஜோன் ​தலைமையில் நடைபெற்றது.


இப் பயிற்சி முகாமில் தரம் 10 மாணவர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் பங்குகொண்டனர்.

இந் நிகழ்வில்  மட்டக்களப்பு  உளநல பயிற்றி ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை போல் அற்குணநாயகம், பாடசாலை அதிபர் என். தர்மசீலன் மற்றும் ஆசிரியர்கள் உளநல பயிற்றி ஆலோசனை நிலைய உத்தி​​​​​​யோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு நடைபெற்ற இந்த தலைமைத்துவப் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages