மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு வியாழக்கிழமை (18ம் திகதி) அரசடித்தீவு மைதானத்தில் நடைபெற்றது
வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்வில் கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர் ஐ.தருமதிலக பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் பார்த்தீபன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள மூன்று கோட்டங்களிலுமுள்ள வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயம் மற்றும் அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் இவ் விசேட தேவையுடைய மாணவர்கள் விசேட திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களின் ஆற்றலை வௌிப்கொணரும் வகையில் இப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஏனைய மாணவர்களுக்கு உள்ள சுதந்திரமும் உரிமைகளும் எமது விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பெறவேண்டும், இப் போட்டிகளில் அவர்களும் தமது திறமைகளை காட்ட வேண்டும் என்பதற்காகவே இப் போட்டியை நடாத்தினோம் என வலயக்கல்விப் பணிப்பாளர் சிறிதரன் தெரிவித்தார்.
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு இவ்வாறான போட்டி கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இந்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் இன்று நடைபெறுகின்றது என கல்வித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்போது நடைபெற்ற போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
Post Top Ad
Friday, July 19, 2019
Home
Unlabelled
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி
Share This
About Admin
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.