Breaking

Post Top Ad

Saturday, June 8, 2019

ஜெர்மன் தெண்டு நிறுவன பிரஜையுடன் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மட்டு. சியோன் ​தேவாலயத்திற்கு வியம்!

பயங்கரவதா குண்டுத் தாக்குதல் இடம்​பெற்ற மட்டக்களப்பு சியோன் ​தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜெர்மன் நாட்டு வானவில் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஹென்றிக்  உள்ளிட்ட குழுவினர் இன்று வருகைதந்திருந்தனர்.


சியோன் தேவாலய  குண்டவெடிப்பு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை ஜேர்மன் நாட்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு தேவையான தகவல்களை பெறும் பொருட்டு தாம் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளதாகவும் வத்தேகம சமிந்த தேரர் இதன்போது தெரிவித்தார்.


இன வாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று பட்டு இன மத வேறுபாடுகளுக்கு அப்பால்  ​செயற்படவேண்டுமெனவும், உலகின் எந்த பகுதிகளிலும் இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க தாம் இறைவனை  பிராத்தனை செய்வதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர்  மேலும் தெரவித்தார்.

இதன்போது குண்டவெடிப்பினால் சேதமுற்ற சியோன் தேவாலயத்தினையும் இக் குழுவினர் பார்வையிட்டதுடன் இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் குறைபாடுகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொண்டனர்.







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages