Breaking

Post Top Ad

Sunday, June 9, 2019

மட்டக்களப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அறுவர் பணத்துடன் கைது!



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  ஆறு பேர் ,52,270  ரூபா பெறுமதியான பணத்துடன் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்



மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள விடுதி  ஒன்றில் சூதாட்டத்தில்  சிலர் ஈடுபடுவதாக   மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய  மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாள்   தீகா வதுற வின் ஆலோசனையின் கீழ்  சனிக்கிழை மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  ,52,270 ரூபா பணமும் சூதாட்டத்திற்கு பாவிக்கப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 

சூதாட்டத்தில் ஈடுபட்டத்தாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை , கல்முனை, ஆரையம்பதி,  கல்லாறு, சாய்ந்தமரு , மட்டக்களப்பு புதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என  விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் தப்பி சென்றுள்ளதாகவும், தப்பி சென்றவரின் கையடக்க தொலைப்பேசி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், தப்பி சென்றவர் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கருதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக 10 ஆம் திகதி திங்கள் கிழமை மட்டக்களப்பு நீதவான நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாள்   தீகா வதுற இதன்போது தெரிவித்தார்







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages