ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு செவ்வாய்கிழமை (25ம் திகதி) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச கிராம அபிவிருத்தி உதியோகத்தர் எஸ். அரசகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், பிரதேச செயலக உதவி திட்டப் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், மண்முனை மேற்கு சுகாதார மேற்பார்வை அதிகாரி வீ.விஜயகுமார் மற்றும் வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் என பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால்,கடந்த (இம்மாதம்) யூன் 23ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் எதிர்வரும் யூலை 01ஆம் திகதி வரை மேற்படி போதைப் பொருள் ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின் றது.
வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி வவுணதீவு சந்தி வரை ெசன்று அங்கு போதைப் பொருட் பாவனையால் சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் பலவும் நிகழ்த்தப்பட்டது.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.