அன்றைய தினம் பிற்பகல் 2மணிக்கு ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறும்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்தும் இந்த செயற்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 27,231 புதிய பயனாளிகளுக்கான உரித்துப் படிவங்கள் வழங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவில் 1897 குடும்பங்களும், மண்முனை தெற்கு எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் 3490 குடும்பங்களும், ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக பிரிவில் 2625 குடும்பங்களும், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 443 குடும்பங்களும், மன்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 1168 குடும்பங்களும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் 948 குடும்பங்களும், கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 2230 குடும்பங்களும், மண்முனை வடக்கில் இருந்து 1630 குடும்பங்களும், ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவில் இருந்து 971 குடும்பங்களும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 1190 குடும்பங்களும், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 2181 குடும்பங்களும், போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் இருந்து 3835 குடும்பங்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து 2996 குடும்பங்களும், மண்முனைப்பற்றுப் பிரதேச செயலக பிரிவில் இருந்து 1717 குடும்பங்களும் புதிதாக சமுர்த்தி திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவ்வைபவத்தில் சமூக வலுவூட்டல் அமைச்சின் பொறுப்புக்களிலிருந்து சமீபத்தில் இராஜினாமாச் செய்து கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, சமுர்த்தி பணிப்பாளர் நாயகம், மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், சர்வமதத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.