முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக சமூகங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சில குழுக்கள் சமூகங்களிடையே இன ரீதியான பதற்றத்தையோ மோதலையோ தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்த திஸ ஊடக அறிக்கை மூலம் இன்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுபவற்றை இதன் மூலம் தொடர்ப்பு படுத்த முடியாது என்று தவறான புரிந்துணர்வு உள்ளுர் பொலிஸாரிடையே உள்ளதாகவும் அது தவறு என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் காலிங்க இந்த திஸ்ஸ குறிப்பிட்டார்.
ஒரு குழுவிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிராக அவமதிக்கும் வகையில் ஒருவர் முகநூல் மூலம் பதிவை மேற்கொண்டால் அவருக்கு எதிராக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை உடன்படிக்கை மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.