Breaking

Post Top Ad

Friday, June 14, 2019

வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு​,​​ களிக்குளம் கிராமங்களில் விவசாயிகளின் தென்னைமரங்கள் ​​ காட்டுயானைகளால் நாசம்​


மட்டக்களப்பு மாவட்டத்தின் ​​வவுணதீவு பிரதேசத்திலுள்ள நெடியமடு​,​​ களிக்குளம்  கிராமங்களில் விவசாயிகளின் தென்னைமரங்களை​​ ​​ நேற்று அதிகாலை காட்டுயானைகள்​  துவசம் செய்துள்ளது.



​இன்று புதன்​கிழமை ​​அதிகாலை 3மணியளவில் ​ இரண்டு விவசாயிகளின் தோட்டத்தினுள்  சில காட்டுயானைகள்   ஊடுருவி அங்குள்ள தொன்​னை மரங்கள் சிலவற்றை அழித்து துவசம் செய்துள்ளது.​

இப் பிரதேச மக்களுக்கு ​அன்றாடம் ​காட்டு யானைகளின் ​தொல்லையால் ​​இரவில் தூக்கமின்றி ​அச்ச​த்தில்​ வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


​இப் பிரதேசத்தில் ​யானை பாதுகாப்பு வேலியில் மின்சாரம் ​ இல்லாமல் உடைந்து சேதமடைந்துள்ள காரணத்தால் காட்டுயானைகள் தங்கு தடையின்று தமது தோட்டத்திற்கு​ள்​ ​ இறங்கி ​ தென்னைமரங்கள், வாழைமரங்கள், மற்றும் தோட்டங்களையும் ​​ அழித்துவிட்டுச் செல்வதாக இவ் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages