இந் நிகழ்வில் கரவெட்டி சமுர்த்தி வங்கி பகுதி, ஆயித்தியமலை சந்தி போன்ற இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை இனங்கண்டு அவ்விடத்திலுள்ள பிளாஸ்டிக் போத்தல்கள், தகரப் பேணிகள், பொலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்களை அகற்றி சுத்தம் செய்யும் சிரமதானப் பணி இடம்பெற்றது.
அம்கோர் நிறுவனத்தின் செயற் திட்டத்தில் டெங்கு கட்டுப்பாடு, சுகாதார பாதுகாப்பு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்கள் தோறும் 10 பேர் கொண்ட குழு அமைத்து மேற்படி அனர்த்த தடுப்பு வேலைத் திட்டத்தினை மாதந்தோறும் மேற்கொள்ள வுள்ளதாக அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இதன்போது டெங்கு விழிப்புணர்வு தொடர்பான ஸ்டிக்கர்களும் இக் குழுவினரால் ஒட்டப்பட்டன.
இந் நிகழ்வில் அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம இளைஞர் யுவதிகள் போன்றோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.