Breaking

Post Top Ad

Saturday, June 22, 2019

மட்டக்களப்பில் மூன்று தையல் பயிற்சி நிலையங்ளில் 48 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கிவைப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னாமுனை, முறக்கொட்டாஞ்சேனை, ஆரையம்பதி ஆகிய மூன்று தையல் பயிற்சி நிலையங்களிலும் அங்கு பயிற்சியை நிறைவு செய்த யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் இன்று சனிக்கிழமை 22ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் 48 பயனாளிகளுக்கு   சுமார் 18 இலட்சம் ரூபா செலவில் இந்த தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் இணைப்பு செயலாளர் ஜோன் லோகநாதன். மகளிர் இணைப்பாளர் மீனா, சமூகசேவகர் சுந்தரம்பிள்ளை. தன்னாமுனை கத்தோலிக்க ஆலயம் அருட்தந்தையர் உள்ளிட்டோர்  அதிதிகளாக கலந்து கொண்டனர்.












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages