மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று படையினரின் சுற்றிவளைப்பின்போது ஞாயிற்றுக்கிழமை 05ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒல்லிக்குளம் பகுதியில் விசேட அதிரடிப்படைஇ இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இந்த தீவிரவாத அமைப்பினரின் பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். அமைப்பின் தற்கொலை தாரிகள் இந்த பயிற்சி முகாமில் இயங்கியதாகவும் இந்த பயிற்சி முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பயிற்சி முகாமில் இருந்த நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறித்த பயிற்சி முகாமில் இருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த முகாம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.