மட்டக்களப்பு, புனாணை பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை உயர் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை,சாய்ந்தமருது உள்ளிட்ட குண்டுத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்
இதனையடுத்து, கிழக்கு மாகாண அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுளையும் ஏனைய நடவடிக்கைகளையம் ஒழுங்குபடுத்த திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படவுள்ள பாடவிதானங்கள் குறித்தும் தெளிவான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.