வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலிற்கு ஊடகவியலாளர்கள் பொலிசாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டு மூடிய அறைக்குள் இரகசியமாக நடைபெற்றது.
நாட்டில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
வவுனியா பூந்தோட்டத்தில் குறித்த அகதி அந்தஸ்து கோரிய வெளிநாட்டு பிரஜைகளை தங்க வைப்பது தொடர்பான கலந்துரையாடலில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, நகரசபைத் தலைவர் இ.கௌதமன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலிற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், மத குருமார்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.