Breaking

Post Top Ad

Sunday, May 12, 2019

நாமல் ராஜபக்ச மட்டக்களப்பிற்கு விஜயம்



(லியோன்)
ஹம்பாந்தோட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
மட்டக்களப்பிற்கு விஜயத்தை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன்   ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின்  மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர்களின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்றும்  மட்டக்களப்பு தனியார் விடுதி ஒன்றில்   நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர் பி சந்திரகுமார்  மற்றும் மட்டக்களப்பு இணைப்பாளர் டி .ஹரி பிரதாப் ஆகியோரின்   ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் ,,மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற வாழ்வாதார பிரச்சினைகள் , அதற்கான  ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்படவுள்ள  அரசியல் தீர்வு  திட்டங்கள் ,போன்ற பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது ,

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட  இணைப்பாளர்கள், ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் மாவட்ட உறுப்பினர்கள்  கலந்துகொண்டனர்
இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வினை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பில் சம்பவத்தில் காயமுற்று வைத்தியசாலையில் சிகிட்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டதுடன் , குண்டு வெடிப்பில் சம்பவம் இடம்பெற்ற சீயோன் ஆலயத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டார்










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages