தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஓமடியாமடு பிரதேசத்தில் மாகவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி குத்தகைக்குப் பெற்று குண்டு வெடிப்புடன் தொடர்பு பட்டவர்கள் பாவித்து வந்திருக்கின்றார்கள்.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தமிழர்களுக்கு காணி வழங்கும் போது இரண்டு ஏக்கர் வயல்நிலம், அரை ஏக்கர் மேட்டு நிலம் வழங்கப்படுகின்றது ஆனால் இஸ்லாமியர்களுக்கு பல ஏக்கர் கணக்கிலே குத்தகை என்ற பெயரில் கொடுக்கின்றார்கள்.
அண்மையில் மிக மோசமான சம்பவம் மட்டக்களப்பில் நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் ஏறாவூர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பல அரச அதிகாரிகளின் உத்தியோக முத்திரைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. தங்களது மக்களுக்கு காணி இல்லை என்று கோசம்போடும் முஸ்லீம் அரசியல்வாதிகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் கள்ள முத்திரைகள் பற்றிப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகுதி அரசியல்வாதிகளும் விசாரிக்கப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய சகோதரர்கள் உத்தியோகத்தர்களாக இருந்த போது பல காணி உறுதிகள் காணாமல் போயிருக்கின்றன. தற்போது அவர்கள் தமிழர் காணிகளுக்கு குத்தகை, பழைய உறுதி என்றெல்லாம் கொண்டு வருகின்றார்கள். எனவே தற்போது நடைபெற்றிருக்கும் சம்பவத்தை உற்று நோக்கும் போது காணி தொடர்பில் பல கள்ள வேலைகள் நடைபெற்றிருக்கின்றது என்பது வெளிப்படையாகியுள்ளது. எனவே இஸ்லாமிய மக்களால் அண்மைக் காலத்தில் தமிழ் பகுதிகளில் தங்களது உறுதிகள் எனக் காட்டப்பட்ட ஒப்பங்கள், உறுதிகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.
50 ஏக்கர்களுக்கு மேல் காணி இருந்தால் அதனை காணி சீர்திருத்த ஆணைக்குழு மேலதிகமானவற்றை கையகப்படுத்தாலம். ஆனால் தற்போதைய கிழக்கு ஆளுநருக்குப் பல இடங்களில் காணி இருக்கின்றது.
இவ்வாறான விடயங்கள் பற்றி அரசாங்கம் கவனத்தில் எடுக்கவேண்டும். என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.