Breaking

Post Top Ad

Sunday, May 12, 2019

ஏறாவூர் - சவுக்கடி பகுதியில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா செல்லவிருந்த சிலர் கைது


மட்டக்களப்பு  மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி பகுதியில் இருந்து  படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல தாயராக இருந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் திகதி காலை பொலிஸாரினால்   கைது செய்யப்பட்டுள்ளனர்.
 சவுக்கடி கடற்கரை பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


இதன்போது  பயணப் பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் தப்பியோடிவிட்டதாகவும், தப்பியோடியவர்களை கைது செய்யும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிருந்து சுமார் 15க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு சட்ட விரோதமான முறையில் அவுஸ்ரேலியா செல்வதற்கு முற்பட்டிருக்கலாம் எனவும், தப்பிச்சென்றுள்ள ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages