இராணுவ சீருடையைப் பிரதிபலிக்கும் ஒத்த வடிவங்களில் அமைந்த ஆயத்த ஆடைகளையோ துணிகளையோ விற்பனை செய்ய வேண்டாம் என ஜவுளிக் கடை வர்த்தகர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக ஏறாவூர் நகர வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இது விடயமாக பொலிஸார் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஏற்கெனவே தங்களால் விற்பனைக்காகக் கொள்வனவு செய்யப்பட்டுள்ள கையிருப்பின் மீதமுள்ள அளவின் விவரங்களைப் பொலிஸார் கோரியுள்ளனர்.
அதற்கான விவரம் சேகரிக்கும் படிவங்கள் ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத்தினால் ஜவுளிக் கடை வர்த்தகர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மறு அறிவுறுத்தல் வரும் வரை தங்கள் கைவசமுள்ள இராணுவ சீருடை வடிவிலமைந்த அல்லது அதனைப் பிரதிபலிக்கும் நிறங்கள் அலங்காரங்கள் கொண்ட ஆயத்த ஆடைகளையும் (ரெடிமேட்) துணிகளையும் விற்பனை செய்யாது அவற்றை தம்வசம் வைத்திருக்குமாறும் சோதனை நடவடிக்கைகளின்போது பொலிஸாருக்குத் தெரியப்படுத்திய கையிருப்பைக் காண்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு கிலேசம் காரணமாகவே இந்தவித கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறுபதற்கு முன்னர் உடுதுணிகள் விற்பனையில் இத்தகைய கட்டுப்பாடுகளும் மட்டுப்பாடுகளும் இல்லாதிருந்ததால் தாங்கள் இவற்றை விற்பனைக்காக கொள்வனவு செய்துவிட்டிருந்ததாககத் தெரிவிக்கும் ஜவுளிக் கடை வர்த்தகர்கள், தற்போதைய நெருக்கடி நிலைமை தங்களுக்கு பாரிய வர்த்தக இழப்புக்களை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.