Breaking

Post Top Ad

Friday, May 3, 2019

காத்தான்குடி தற்கொலை அங்கி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு - படங்கள்





மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பகுதியில் தற்கொலை அங்கி மீட்பு   
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  புதிய காத்தான்குடி  பகுதியில் இருந்து தற்கொலை அங்கி ஒன்றும் மற்றும் அடையாள அட்டை , கையடக்க தொலைபேசிகள் , வங்கி கணக்கு புத்தகங்கள்  ,  புகைப்படங்கள் போன்ற பொருட்கள் அதிரடிபடையினரால்  (02)  மீட்கப்பட்டுள்ளன
மட்டக்களப்பு  குண்டு வெடிப்பு  சம்பவத்தில் தொடர்புடைய சூத்திரதாரியான முகம்மது காசிம் முகம்மது சஹாரானின் தம்பி சாய்ந்தமருது வீட்டுத்திட்ட பகுதியில் தற்கொலை செய்து கொண்ட  முகம்மது காசிம் முகம்மது ரில்வான் மனைவியின் வீட்டினை பொலிசார் மற்றும் அதிரடிபடையினரினால் நேற்று  (02)   மேற்கொள்ளப்பட்ட சோதனை  நடவடிக்கையின் போது  குறித்த  பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி தெரிவித்தார்


காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சியின்  ஆலோசனையின் கீழ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஏக்கநாயகவின்  தலைமையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  பகுதியில் விசேட சோதனை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்  (02)    புதிய காத்தான்குடி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை சுற்றிவளைப்புக்களின் போது குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் முகம்மது காசிம் முகம்மது ரில்வானின் மனைவியின் தாயும் தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராச்சி தெரிவித்தார்

மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்படவர்கள் தொடர்பான விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருடன் அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages