Breaking

Post Top Ad

Sunday, May 26, 2019

மட்டக்களப்பு - திமிலைதீவு அருள்மிகு மகாவிஷ்ணு ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா


மட்டக்களப்பு - திமிலைதீவு அருள்மிகு மகாவிஷ்ணு ஆலய வருடாந்த மகோற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா இன்று இடம்பெறுகின்றது.

மட்டக்களப்பில் சிறப்புமிக்க ஆலயமாக திகழும் மகாவிஷ்ணு ஆலயம் வேண்டும் அடியவர்க்கு அருள் வழங்கும் தலமாக விளங்குகின்றது.


நேற்றயதினம்  சனிக்கிழமை ஆரம்பமான திருவிழா  எதிர்வரும்  2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாணச் சடங்கு இடம்பெற்று திங்கட்கிழமை காலை நிறைவுபெறவுள்ளது.

இன்றையதினம் பகல்  2மணிக்கு இடம்பெற்ற  கிரியை நிகழ்வில் பெருமானுக்கு இளநீர் கொண்ட விஷேட அபிஷேகம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆலய பிரதம குரு சிவத்திரு. சின்னையா வடிவேல் மகேந்திரன் அவர்களால் பூசைகள் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு மகாவிஷ்ணு பகவானை தரிசித்தனர்.

திருவிழா காலங்களில் இரவுப் பூசையைத் தொடர்ந்து ஆலயமுன்றலில்  பக்தி கலை நிகழ்வுகளும் இடம்பெறும் என ஆலய நிருவாகிகள் தெரிவித்தனர்.

 










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Pages